Images

Delete your account permanently from a site.



சமூக வலைத் தள அக்கவுண்ட் பதிவை நீக்க:
ஏதாவது ஒரு சமூக இணைய வலைத் தளத்திலாவது இன்றைய கம்ப்யூட்டர் பயனாளர்கள் தங்களுக்கென பதிவு ஒன்றைக் கொண்டுள்ளனர். இதன் மூலம் தங்களை நண்பர்களுக்குத் தெரியப்படுத்தவும், நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவுமான பணிகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக இணைய தளங்கள் முன்னணியில் உள்ளன. இவற்றை நாடி, தங்களுக்கென அக்கவுண்ட் பதிவு ஒன்றை அமைப்பது மிக மிக எளிது. ஆனால், அந்த அக்கவுண்ட்டினை முடித்துக் கொள்வது அவ்வளவு எளிதான வழியாகக் காட்டப்படவில்லை. அவ்வாறு பதிவை ரத்து செய்து முடித்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டாலும், நாம் ஏற்கனவே அவற்றில் அமைத்த பதிவுகளையும், நம் தொடர்புகளையும் பதிந்து எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். நாம் மேற்கொண்ட தொடர்புகள் நமக்கு எந்த நாளும் நினைவில் இருப்பது உற்சாகம் தரும் என்பதற்காக, இந்த ஆவல் அனைவருக்கும் ஏற்படுவதுண்டு. எனவே, நீங்கள் முதலில் உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள தொடர்பு தகவல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுத்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பதிவு செய்து கொள்ளலாம். அடுத்து, அக்கவுண்ட் நீக்கும் வழியை நாடலாம்.
1.பேஸ்புக்:

     இன்றைய நிலையில், மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் சமூக இணைய தளம் இதுவாகத்தான் இருக்கும். இதில் உள்ள பதிவினை முடிவிற்குக் கொண்டு வர எண்ணினால், உங்களுக்கு இரண்டு வழிகள் தரப்படுகின்றன. இந்த சமூக வலைத்தளத்திலிருந்து விலகுவதால், நீங்கள் எவற்றை எல்லாம் இழக்கிறீர்கள் என்று தெரியாமல் இருந்தால், தற்போதைக்கு இதனை மூடிவிட்டு, பின் ஒரு நாளில், மீண்டும் இதனைப் புதுப்பிக்க நீங்கள் எண்ணலாம். அதற்கான வழி தரப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ள முதலில் deactivation பக்கத்திற்குச் செல்லவும். சென்றவுடன், நீங்கள் உங்கள் பேஸ்புக் நண்பர்களை இனித் தொடர்பு கொள்ள முடியாது, இது உங்களுக்கு இசைவா? என ஒரு செய்தி தரப்படும். அதே நேரத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக் தளத்தினை விட்டு விலகுகிறீர்கள் எனக் கட்டாயமாகக் காரணத்தைப் பதிய வேண்டியதிருக்கும். இதனை முடித்த பின்னர், Confirm என்பதில் கிளிக் செய்தால், உங்கள் அக்கவுண்ட் பதிவு மறைந்துவிடும். இனி, மீண்டும் நீங்கள் பதிவினைப் புதுப்பித்தால் மட்டுமே, நண்பர்களுடன் நீங்களும், நீங்கள் உங்கள் நண்பர்களுடனும் பேஸ்புக் வழியாகத் தொடர்பு கொள்ள முடியும். புதுப்பிக்க வழக்கம் போல அக்கவுண்ட் லாக் இன் செய்தாலே போதும். இப்படி இல்லாமல், நமக்கு இந்த பேஸ்புக் தொடர்பே வேண்டாம் என்று முடிவு செய்தால், நீங்கள் account removal பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு Delete My Account என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். கிளிக் செய்தவுடன், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்டு உறுதி செய்யப்படும். பின்னர், அங்கு கிடைக்கும் கேப்சா சோதனையை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பின்னரும், உங்கள் அக்கவுண்ட் இரு வாரங்களுக்கு இருக்கும். இந்தக் காலத்தில், அந்த அக்கவுண்ட்டைப் புதுப்பிக்க நீங்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், உங்கள் அக்கவுண்ட் காலாவதியாகி, நீக்கப்படும்.
2. ட்விட்டர்:
அடுத்ததாக, பிரபலமாக இயங்கும் சமூக இணைய தளம் ட்விட்டர். இதிலிருந்து விலகும் முடிவினை எடுத்து விட்டீர்களா? ட்விட்டர் இணைய தளத்திற்கு வழக்கம் போலச் செல்லுங்கள். உங்கள் அக்கவுண்ட் பதிவில் நுழையுங்கள். இணைய தளப் பக்கத்தில், வலது மேல் மூலையில் காணப்படும் சிறிய சக்கர ஐகானில் கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் பக்கத்தில் கீழாகக் காட்டப்படும் ‘Deactivate my account’ என்ற தொடர்பில் கிளிக் செய்திடுங்கள். இதில் உள்ள பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஓர் எச்சரிக்கை கிடைக்கும். தற்காலிகமாக உங்கள் அக்கவுண்ட் பதிவு நீக்கப்படு வதாகவும், தொடர்ந்து 30 நாட்கள் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என்றால், உங்கள் பதிவு நீக்கப்படும் என்று ஒரு செய்தி காட்டப்படும். இந்த 30 நாட்களில், மீண்டும் ட்விட்டர் இணையதளத் தொடர்பு தேவை என நீங்கள் எண்ணினால், வழக்கம் போல லாக் இன் செய்து தொடரலாம்.
3. கூகுள் ப்ளஸ்:
கூகுள் இணைய தளத்தின் ஒரு பிரிவான, கூகுள் ப்ளஸ் பிரிவில் உள்ள உங்கள் அக்கவுண்ட்டினை, முழுவதுமாகவே நீங்கள் நீக்கிவிடலாம். இதற்கு முதலில் கூகுள் இணையதளம் (www.google.com) செல்லுங்கள். வலது மேல் மூலையில் உள்ள உங்கள் அக்கவுண்ட் லிங்க்கில் கிளிக் செய்திடவும். இங்கு மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலாகப் பார்க்கையில் இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருப்பதாகத் தெரிந்தாலும், மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நீங்கள் கூகுள் ப்ளஸ் தொடர்பிலிருந்து விலக விரும்பினால், ‘Delete profile and remove related Google+ features’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். இப்போது இதனைத் தேர்ந்தெடுப்பதால், ஏற்படும் விளைவுகள் பட்டியலிடப்படும். கூகுள் தளத்தில் பல இடங்களில் உங்களால் தொடர்பு கொள்ள முடியாது என எச்சரிக்கை கிடைக்கும். இவற்றில் எந்த சேவை எல்லாம் தேவை இல்லையோ, அவற்றை டிக் செய்திடவும். பின்னர் ‘Remove selected services’ என்பதில் கிளிக் செய்திடவும். இதற்குப் பதிலாக ‘Delete your entire Google profile’ என்பதில் கிளிக் செய்தால், யூட்யூப் மற்றும் குகூள் பஸ் முதற்கொண்டு பல சேவைகளை நீங்கள் இழக்க வேண்டியதிருக்கும். உங்கள் அக்கவுண்ட்டினை முழுமையாக நீக்க எண்ணினால், உங்கள் அக்கவுண்ட் பிரிவில் Account Management என்பதில் உள்ள ‘Close account and delete all services and information associated with it’ என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். பல நிலைகளில் உள்ள தகவல்களை இந்த ஆப்ஷன் தேர்ந்தெடுக்கையில் நீக்க வேண்டியதிருப்பதால், மீண்டும் உங்களிடம் உறுதி செய்திடும் ஆப்ஷன் கேட்கப்படும். எனவே கூகுள் தரும் பல சேவைகளில் (AdSense முதல் YouTube வரை) எவை எல்லாம் வேண்டாமோ, அவற்றில் கிளிக் செய்து, உறுதி செய்திடவும். உறுதி செய்திடுகையில், மீண்டும் உங்கள் பாஸ்வேர்ட் கேட்கப்பட்டு உறுதி செய்யப்படும். மீண்டும் ஒருமுறை ‘Yes, I want to delete my account’ என்ற பட்டனில் கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.

     மேலே காட்டியுள்ள இணைய தளங்களுடன், Instagram மற்றும் Flickr போன்ற சமூக தளங்களும், இன்னும் சிலவும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் இருந்து நம் பதிவுகளை நீக்குவது எளிதான வழியாகத் தரப்பட்டுள்ளது. எப்போது தேவை இல்லை என்று உணர்கிறோமோ, அப்போதே, நம்மால் ஏற்படுத்தியுள்ள தகவல்களைக் காப்பி எடுத்துப் பின்னர், பதிவை நீக்கிவிடலாம்.
இதன் தொடர்பில் இன்னொரு தகவலையும் இங்கு காணலாம். இது போன்ற அக்கவுண்ட்களை நீக்குவதற்கென accountkiller என்ற ஒரு புரோகிராம் உள்ளது. இதனை http://www.accountkiller.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்தில் இணையதளங்களில் உள்ள அக்கவுண்ட்களை நீக்குவதில் உள்ள சிக்கல்களின் அடிப்படையில், அனைத்து தளங்களும் ஒயிட்லிஸ்ட், கிரே லிஸ்ட் மற்றும் பிளாக் லிஸ்ட் என மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒயிட் லிஸ்ட் மிக எளிதான வழிகளைக் கொண்டுள்ள தளங்களையும், பிளாக் லிஸ்ட் சுற்றி வளைத்துச் செயல்பட்டு நீக்கும் தளங்களையும் கொண்டுள்ளன. இடையே உள்ள கிரே லிஸ்ட், சிக்கல்கள் சுமாராக உள்ளனவற்றைக் கொண்டுள்ளன.

0 comments: